ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ.60 லட்சத்தில் புதிய கட்டிடம்


ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ.60 லட்சத்தில் புதிய கட்டிடம்
x
தினத்தந்தி 25 April 2022 1:42 AM IST (Updated: 25 April 2022 1:42 AM IST)
t-max-icont-min-icon

பனமரத்துபட்டியில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ.60 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதற்கான கால்கோள் விழாவில் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. கலந்து கொண்டார்.

பனமரத்துப்பட்டி:-
பனமரத்துப்பட்டி பேரூராட்சி அலுவலகம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் கட்டிடம் பழுதடைந்ததால் ரூ.60 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்ட கால்கோள் விழா நடந்தது. விழாவிற்கு பனமரத்துப்பட்டி ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய கட்டிட பணிகளை தொடங்கி வைத்தனர். இதில் சேலம் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெமினி, பனமரத்துப்பட்டி பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரி, துணைத்தலைவர் பிரபுகண்ணன்,  ஒன்றிய தி.மு.க. துணை செயலாளர் ராஜா, பேரூராட்சி செயல் அலுவலர் சிவராஜ், வட்டார மருத்துவ அலுவலர் மகிதா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story