தூய செல்வநாயகி அன்னை ஆலய தேர்பவனி
வெள்ளாண்டி வலசு தூய செல்வநாயகி அன்னை ஆலய தேர்பவனி நடந்தது.
எடப்பாடி:-
எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டி வலசு தூய செல்வநாயகி அன்னை ஆலயத்தில் 368-வது பஸ்கா பெருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி உலக மீட்பர் என்ற தலைப்பில் நாடகம் நடைபெற்றது. 20 மேடைகள் அமைக்கப்பட்டு, 300 கலைஞர்கள் கலந்து கொண்டு இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக நடித்து காண்பித்தனர். சேலம் மறைமாவட்ட முதன்மை குரு மைக்கேல் ராஜ் செல்வம் தலைமை தாங்கினார். பங்கு தந்தை பிரான்சிஸ் ஆசைத்தம்பி வரவேற்றார். எடப்பாடி நகராட்சி தலைவர் பாஷா, சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ், எடப்பாடி சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ், புனித மரியன்னை பள்ளி தலைவர் கொழந்தாகவுண்டர், காவடி கமிட்டி தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவிழா திருப்பலி மாசில்லாப்பாளையம் பங்கு தந்தை விமல், சேலம் குழந்தை இயேசு பேராலயம் ஜோசப்லாசர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. விழாவையொட்டி தேர்பவனி நடந்தது. இதில் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் இயேசு, செல்வநாயகி அன்னை சொரூபங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story