இரட்டிப்பு பணம் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.2½ லட்சம் மோசடி


இரட்டிப்பு பணம் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.2½ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 25 April 2022 1:44 AM IST (Updated: 25 April 2022 1:44 AM IST)
t-max-icont-min-icon

இரட்டிப்பு பணம் தொடர்பாக ரூ.2½ லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சேலம்:-
சேலம் அழகாபுரம் சோனாநகரை சேர்ந்த ராம் பிரசாந்த் மனைவி இலக்கியா (வயது 28). இவர், ஆன்லைனில் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பாக கிடைப்பதாக தகவலை பார்த்துள்ளார். அதை நம்பிய அவர், ரூ.200 அனுப்பி வைத்துள்ளார். அதற்கு உடனடியாக ரூ.187 கமிஷன் வந்தததாக கூறப்படுகிறது. இதனால் மகிழ்ச்சி அடைந்த இலக்கியா, தனது பெயரில் 3 வங்கிகளில் இருந்த ரூ.2 லட்சத்து 63 ஆயிரத்து 386-ஐ சம்பந்தப்பட்ட வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். அதன்பிறகு அந்த தொகைக்கு இரட்டிப்பு தொகை எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பலமுறை தகவல் அனுப்பியும் எந்த பதிலும் திருப்பி வரவில்லை. பணம் இரட்டிப்பு தருவதாக கூறி ரூ.2 லட்சத்து 63 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story