ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் மத்திய சுகாதாரக்குழு ஆய்வு


ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் மத்திய சுகாதாரக்குழு ஆய்வு
x
தினத்தந்தி 25 April 2022 2:25 AM IST (Updated: 25 April 2022 2:25 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் மத்திய சுகாதாரக்குழு ஆய்வு செய்தது.

ஈரோடு
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் ஆலோசகர் டாக்டர் எஸ்.கே.சிக்தர் தலைமையிலான மருத்துவ குழுவினர் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு அரசு ஆஸ்பத்திரிகளில் ஆய்வு நடத்தி வருகிறார்கள். அதன்படி மத்திய சுகாதாரக்குழுவினர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் நேற்று காலை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பிரசவ வார்டுக்கு சென்ற டாக்டர் எஸ்.கே.சிக்தர், அங்கு பிறந்த குழந்தைகளுடன் சிகிச்சை பெற்று வரும் தாய்மார்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
பச்சிளம் குழந்தைகளை பராமரிக்கும் முறைகள், தாய்மார்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், படுக்கை வசதிகள், வார்டுகளில் சிகிச்சை பெறும் தாய்மார்களின் எண்ணிக்கை, போதுமான இடவசதி ஆகியன குறித்து ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் வெங்கடேசிடம் அவர் கேட்டு தெரிந்து கொண்டார்.
அவசர கால வாகனமான 108 வசதி, தாய்- சேய் நல வாகனமான 102 வசதி போன்றவற்றை நோயாளிகள் முழுமையாக பயன்படுத்த வேண்டும். முதல் குழந்தை பெற்றெடுத்த உடன் 2-வது குழந்தைக்கு குறைந்தது 3 ஆண்டுகள் இடைவெளி விட வேண்டும் என்று அதிகாரிகளிடம் டாக்டர் எஸ்.கே.சிக்தர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது அரசு ஆஸ்பத்திரி உறைவிட டாக்டர் கவிதா உடனிருந்தார்.
இதைத்தொடர்ந்து ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள மாநகராட்சி மகப்பேறு ஆஸ்பத்திரியில் டாக்டர் எஸ்.கே.சிக்தர் ஆய்வு செய்தார்.

Next Story