ஈரோடு மாவட்டத்தில் கன மழை; கொடுமுடியில் அதிகபட்சமாக 108 மி.மீட்டர் பதிவு
ஈரோடு மாவட்டத்தில் கன மழை பெய்தது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பகலில் வெயில் சுட்டெரித்தது. ஒரு சில நாட்கள் மட்டும் மாலை நேரத்தில் மழை பெய்தது. நேற்று முன்தினமும் பகலில் வெயில் வாட்டி வதைத்தது. மாலையில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. இடி-மின்னலுடனும், சூறாவளி காற்றுடனும் பலத்த மழை பெய்தது.
ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. ஈரோட்டில் பெய்த மழை காரணமாக வ.உ.சி. பூங்கா மைதானத்தில் தற்காலிகமாக செயல்படும் காய்கறி மார்க்கெட் சேறும், சகதியுமாக மாறியது. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டார்கள்.
கொடுமுடியில் கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக 108 மில்லி மீட்டர் மழை பதிவாக இருந்தது. இதேபோல் மற்ற பகுதிகளில் பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
பவானி 56.6
வரட்டுப்பள்ளம் 22
கோபிசெட்டிபாளையம் 19
மொடக்குறிச்சி 19
கவுந்தப்பாடி 18.4
பெருந்துறை 18
குண்டேரிப்பள்ளம் 16.4
ஈரோடு 15
எலந்தைகுட்டை 12.8
அம்மாபேட்டை 11.6
கொடிவேரி 8.2
பவானிசாகர் 6.4
சென்னிமலை 6
சத்தியமங்கலம் 5
தாளவாடி1.2
Related Tags :
Next Story