நாகர்கோவிலில் போதை மாத்திரை, கஞ்சாவுடன் மாணவர்கள் உள்பட 7 பேர் சிக்கினர் போலீசார் விசாரணை
நாகர்கோவிலில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா வைத்திருந்த மாணவர்கள் உள்பட 7 பேர் சிக்கினர். அவா்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா வைத்திருந்த மாணவர்கள் உள்பட 7 பேர் சிக்கினர். அவா்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீசார் ரோந்து
குமரி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். நாகர்கோவில் மாநகருக்குட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சில கும்பல் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை சப்ளை செய்வதாக புகார்கள் வந்தன.
இதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தும் படி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து நாகர்கோவில் கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையிலான போலீசார் நேற்று கோட்டார் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும் வகையில் பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரிந்த 7 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
போதை மாத்திரை
அப்போது அந்த வாலிபர்கள் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பயன்படுத்தியது தெரியவந்தது. போலீசார் அவர்கள் அனைவரையும் பிடித்து கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், அதில் சிலர் மாணவர்கள் என்பதும் தெரிய வந்தது.
அவர்களிடமிருந்து 1.100 கிலோ கஞ்சா மற்றும் 75 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் எங்கிருந்து வாங்கப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் நாகர்கோவிலில் விலை உயர்ந்த போதை மருந்து பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story