பழங்குடியின பெண்ணை தாக்கி ஆபாசமாக வீடியோ எடுத்த 9 பேர் மீது வழக்கு


பழங்குடியின பெண்ணை தாக்கி ஆபாசமாக வீடியோ எடுத்த 9 பேர் மீது வழக்கு
x

நிலத்தகராறில் பழங்குடியின பெண்ணை தாக்கி ஆபாசமாக வீடியோ எடுத்த 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு:

தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா குரிபல்லா கிராமத்தில் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த ஒரு பெண் வசித்து வருகிறார். அந்த பெண்ணுக்கும், கிராமத்தை சேர்ந்த சிலருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்து உள்ளது. இந்த நிலையில் நேற்று பிரச்சினைக்கு உரிய நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் அளந்து கொண்டு இருந்தனர்.

  அப்போது அங்கு வந்த கிராமத்தை சேர்ந்த சந்தீப், சந்தோஷ், குலாபி, சுகுணா, குஷ்மா, லோக்யா, அனில், லலிதா, சன்னகேசவா ஆகிய 9 பேரும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்பே பெண்ணை தாக்கியதாக தெரிகிறது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் சகோதரி, சந்தீப் உள்ளிட்டோரிடம் இருந்து தனது சகோதரியை மீட்க முயன்றார்.

  அப்போது பெண்ணின் சகோதரியை 9 பேரும் சேர்ந்து தாக்கியதோடு, ஆடையை பிடித்து கிழித்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த பெண்ணை செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் பெல்தங்கடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் சந்தீப், சந்தோஷ், குலாபி, சுகுணா உள்பட 9 பேர் மீதும் பெல்தங்கடி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Next Story