நெல்லையில் இரவில் பயங்கரம்: லோடு ஆட்டோ டிரைவர் சரமாரி வெட்டிக்கொலை


நெல்லையில் இரவில் பயங்கரம்: லோடு ஆட்டோ டிரைவர் சரமாரி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 25 April 2022 3:38 AM IST (Updated: 25 April 2022 3:38 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் லோடு ஆட்டோ டிரைவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்

நெல்லை:
நெல்லையில் லோடு ஆட்டோ டிரைவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
லோடு ஆட்டோ டிரைவர்
நெல்லை மாவட்டம் மானூர் சுப்பையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (வயது 38). லோடு ஆட்டோ டிரைவர். இவர் நேற்று இரவு நெல்லை டவுன் நயினார்குளம் மார்க்கெட்டில் காய்கறிகள் லோடு இறக்கி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சசிகுமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த சசிகுமார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். 
சாவு
இதுகுறித்து தகவல் அறிந்ததும், நெல்லை மாநகர மேற்கு துணை போலீஸ் கமிஷனர் கே.சுரேஷ்குமார், சந்திப்பு உதவி போலீஸ் கமிஷனர் அண்ணாதுரை, தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சசிகுமாரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
 அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் சசிகுமார் பரிதாபமாக இறந்தார்.
கொலையாளிகளுக்கு வலைவீச்சு
இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், கோவில் நிர்வாகம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை அல்லது நிலத்தகராறு தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் மர்மநபர்கள் சசிகுமாரை கொலை வெட்டி செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தலைமறைவான கொலையாளிகளை, போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.
நெல்லையில் டிரைவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story