தென்காசி அருகே சிறப்பு கிராமசபை கூட்டம்- கலெக்டர் பங்கேற்பு
சிறப்பு கிராமசபை கூட்டம்- கலெக்டர் பங்கேற்பு
தென்காசி:
தென்காசி அருகே குத்துக்கல்வலசை கிராம பஞ்சாயத்தில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தின சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கோபாலசுந்தரராஜ் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசுகையில், அனைவருக்கும் மேம்பட்ட வாழ்க்கை சூழல், வளர்ச்சி மற்றும் செழிப்பு என்ற நிலையை ஏற்படுத்தும் கிராம ஊராட்சியாக அமைத்தல், கிராம ஊராட்சியில் உள்ள அனைத்து வயதினரும் உடல்நலத்துடன் வாழ தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது, மக்கள் சக்தியை ஒன்று திரட்டி, அரசின் பல்வேறு துறைகள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், சமுக அமைப்புகள், கல்வி நிலையங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியோருடன் இணைந்து செயல்பட்டு கிராம வளர்ச்சியை மேம்படுத்துவது குறித்து விளக்கி கூறினார். கூட்டத்தில் பஞ்சாயத்துக்களின் உதவி இயக்குனர் பிரான்சிஸ் மகாராஜன், வேளாண்மை உதவி இயக்குனர் கனகா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகசுந்தரம், குழந்தைமணி, பஞ்சாயத்து தலைவர் சத்யராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story