திருஏடு வாசிப்பு விழா: அய்யா இந்திர வாகனத்தில் பவனி
இந்திர வாகனத்தில் பவனி நடைபெற்றது
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே குருவன்கோட்டை நாராயணசாமி தர்மபதியில் 32-ம் ஆண்டு திரு ஏடு வாசிப்பு திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அய்யாவுக்கு பணிவிடை, உகபடிப்பு, அகில திரட்டு திரு ஏடு வாசிப்பு நடைபெற்றது. 8-ம் திருநாள் மாலையில் அய்யாவின் திருக்கல்யாண ஏடு வாசிப்பு, அன்னதானம், இரவில் அய்யா கருட வாகனத்தில் பதியை சுற்றி வலம் வருதல் நடந்தது. 10-ம் திருநாளான நேற்று மாலையில் அய்யா இந்திர வாகனத்தில் எழுந்தருளி, பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நள்ளிரவில் அய்யாவின் பட்டாபிஷேகத்தை தொடர்ந்து பக்தர்களுக்கு இனிப்பு தர்மம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை குருவன்கோட்டை அன்புகொடி மக்கள் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story