ஆழ்வார்குறிச்சியில் கஞ்சா-2 பேர் கைது


ஆழ்வார்குறிச்சியில்  கஞ்சா-2 பேர் கைது
x
தினத்தந்தி 25 April 2022 5:17 AM IST (Updated: 25 April 2022 5:17 AM IST)
t-max-icont-min-icon

ஆழ்வார்குறிச்சியில் கஞ்சா வைத்திருந்ததாக 2 பேர் கைது

நெல்லை:
நெல்லை மேலப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எபனேசர் மற்றும் போலீசார், மேல கருங்குளம் பீடி காலனி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்றதாக அப்பகுதியைச் சேர்ந்த மாடசாமி (வயது 25), பாகவதர் காலனியை சேர்ந்த இசக்கிமுத்து (19) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 450 கிராம் கஞ்சா, ரூ.1,700, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதேபோன்று ஆழ்வார்குறிச்சியில் கஞ்சா வைத்திருந்ததாக சக்தி ஆனந்த் (26), ராமலட்சுமணன் (25) ஆகிய 2 பேரை ஆழ்வார்குறிச்சி போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Next Story