ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி கூடம்
ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி கூடம் திறக்கப்பட்டது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் 50 கியூபிக் மீட்டர் திறனுள்ள கிரையோஜெனிக் ஆக்சிஜன் உற்பத்தி செய்யக்கூடிய ரூ.2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உற்பத்தி கூடத்தை, ராணிப்பேட்டை பெல் நிறுவன பொது மேலாளர் (பொறுப்பு) ரஜீவ் சிங் முன்னிலையில், பெல் நிறுவனத்தின் தலைவரும், மேலாண்மை இயக்குனருமான டாக்டர் நளின் சிங்கல் தொடங்கி வைத்தார்.
காற்று மண்டலத்திலிருந்து 99.5 சதவீத தூய்மையுடன் பிரித்தெடுக்கப்படும் இந்த (உயிர்வளி) ஆக்சிஜன் பெல் நிறுவனத்தின் தொழிலகத் தேவையை நிறைவு செய்வதுடன், மருத்துவ பயன்பாட்டிற்கும் உதவும். இவ்வாறு உற்பத்தியாகும் உயிர்வளி (ஆக்சிஜன்) கொரோனா அலைகளின் போது, உயிர் காக்க பெரிதும் உதவும் என்று பெல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story