தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 25 April 2022 4:39 PM IST (Updated: 25 April 2022 4:39 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி பொதுமக்கள் குறைகள் அடங்கிய பகுதி

மாணவர்கள் விடுதியில் முறைகேடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், தண்டராம்பட்டு, கலசபாக்கம், போளூர், செங்கம், சேத்துப்பட்டு, ஆரணி, வந்தவாசி, செய்யாறு, வெம்பாக்கம் உள்பட 12 வட்டாரத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் கீழ் 49 விடுதிகள் உள்ளன. கொரோனா பரவலால் 2 ஆண்டுகளாக விடுதி மூடப்பட்டு இருந்தது. தற்போது திறந்துள்ளன. மாவட்டத்தில் பெரும்பாலான விடுதிகளில் மாணவர்கள் படிக்காமலேயே தங்கி படிப்பதாக விடுதி காப்பாளர்கள் போலியாக வருகைப் பதிவேடு காண்பித்து முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் பல்லாயிரம் ரூபாய் மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை கையாடல் செய்வதாக மாணவர்களின் பெற்றோர், பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சரவணன், திருவண்ணாமலை.

கான்கிரீட் கலவை அகற்ற வேண்டும்

வேலூர் சைதாப்பேட்டை முருகன் கோவில் முன்பு உள்ள ஆற்காடு சாலையில் கடந்த சில நாட்களாக கான்கிரீட் கலவை ஆங்காங்கே திட்டுத் திட்டாக காணப்படுகிறது. இதனை அகற்றாததால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். இந்த கான்கிரீட் கலவையை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மலரவன், வேலூர். 

 ஆரம்ப சுகாதார நிலையத்தை பராமரிக்க வேண்டும்

ராணிப்ேபட்டை மாவட்டம் அரக்ேகாணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாராஞ்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. அதை, சரியாக பராமரிக்காமல் சுகாதாரமற்ற நிலையில் செயல்பட்டு வருகிறது. டாக்டரும், நர்சுகளும் குறிப்பிட்ட நேரத்தில் வருவதில்லை என்ற குற்றச்சாட்டுள்ளது. ஊசி போடுவது இல்லை. மாத்திரையை மட்டும் வழங்கி அனுப்பி விடுகிறார்கள். சிகிச்ைச நிலை வருத்தமளிக்கிறது. ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டித்தர வேண்டும். ஆம்புலன்ஸ் வசதி, குடிநீர் வசதி செய்து தர வேண்டும். மருத்துவக் கழிவுகள் திறந்த வெளியில் வீசுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-இளையராஜா, அரக்கோணம்.

குப்ைபகளை அப்புறப்படுத்துவார்களா?

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் பொதுமக்கள் நடமாடக்கூடிய இடத்தில் குப்பைகளை குவித்து ைவத்துள்ளனர். அதை, பேரூராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்துமா?
-அம்மு, போளூர்.

குடிநீர் சுத்திகரிப்பு கருவி பழுது

கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி உள்ளது. இது, அடிக்கடி பழுதடைந்து சீர்செய்யாமல் இருக்கிறது. இதனால் அலுவலகம் வருவோருக்குக் கிடைக்க வேண்டிய குடிநீர் கிடைக்கவில்லை. தாகம் அதிகம் எடுக்கும் கோடைக்காலத்தில் குடிநீர் தேவையை கருதி உடனடியாக இதை சீரமைக்க வேண்டும்.
-திருமால், கே.வி.குப்பம்.

 குடிநீர் குழாயில் உடைப்பு

திருப்பத்தூரில் சேலம்-திருவண்ணாமலை கூட்ரோடு அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக ெவளியேறுகிறது. அந்த இடத்தில் தார் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இரவில் வரும் வாகனங்கள் பள்ளத்தில் இறங்கி விடாமல் இருக்க அந்தப் பகுதியில் கருங்கல் வைத்துள்ளனர். அந்த வழியாக ஒரு வாகனம் வேகமாக வரும்போது மோதி விபத்துக்கு உள்ளாகும் நிலை உள்ளது. உடைந்த குடிநீர் குழாைய 10 நாட்களாக யாரும் சீரமைக்காமல் உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சுந்தரமூர்த்தி, திருப்பத்தூர்.

புதிய சிலை வைக்க வேண்டும்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ளது தும்பேரி கிராமம். இந்தக் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி சிலை 1992-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை தற்போது அதன் தலை இல்லாமலும், கை இல்லாத நிலையிலும், சிலை பீடம் முழுவதும் சிதலமடைந்துள்ளது. அந்தச் சிலையை உடனடியாக அகற்றி விட்டு புதிய சிலை வைக்க வேண்டும்.
-செண்பகராஜன், வாணியம்பாடி. 

ஆபத்தான பயணம்

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரத்தில் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி நேரமான காலை, மாலையில் போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் தனியார், அரசு பஸ்களில் போதிய இடம் இல்லாமல் படியில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணம் செய்து வருகின்றனர். பள்ளி நேரமான காலை, மாலையில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும்.
-குருராஜாராவ், வாணாபுரம்.

Next Story