ரெயிலில் கடத்திய 10 கிலோ கஞ்சா பறிமுதல்


ரெயிலில் கடத்திய 10 கிலோ கஞ்சா பறிமுதல்
x
தினத்தந்தி 25 April 2022 5:30 PM IST (Updated: 25 April 2022 5:30 PM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டையில் ரெயிலில் கடத்திய 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ஜோலார்பேட்டை

காட்பாடி- ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே திருநெல்வேலி உட்கோட்ட சிறப்பு தனிப்படை போலீசார் ஓடும் ரெயில்களில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தல் குறித்து சோதனை செய்தனர்.

 மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா ரெயில் நிலையத்தில் இருந்து கர்நாடக மாநிலம் எஸ்வந்த்பூர் வரை செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் விரைவு ரெயிலில் காட்பாடி- ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே சோதனை செய்தனர். ரெயிலில் சந்தேகப்படும்படியாக இருந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நிரஞ்சன் (வயது 32) என்பது தெரியவந்தது. மேலும் அவர் மறைத்து வைத்திருந்த 3 பைகளை சோதனை செய்ததில் அதில் 10 கிலோ கஞ்சா இருந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது விசாரணைக்காக திருநெல்வேலி ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

Next Story