மயானப்பாதை வசதி கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு மயானப்பாதை வசதி கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கீழ்பென்னாத்தூர் தாலுகா ஆங்குணம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பள்ளி மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். அதன் பிறகு அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
எங்கள் கிராமத்தில் 40 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். நாங்கள் மயானப்பாதையின்றி அவதிப்படுகிறோம். எங்களில் யாரேனும் இறந்தால் அடக்கம் செய்ய போதுமான இடவசதி இல்லாமல் உள்ளது.
இறந்தவர்களின் உடல்களை பிறர் நிலத்தின் வழியே எடுத்துச்செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே எங்களுக்கு மயானப்பாதை வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும்.
கிராமத்தில் குடிநீர் வசதி இல்லாமலும் அவதிப்படுகிறோம். குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். பல ஆண்டுகளாக வீடு கட்டி வாழ்ந்து வரும் எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story