நர்சு விஷம் குடித்து தற்கொலை
வந்தவாசி அருகே நர்சு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வந்தவாசி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த அலத்துறை கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மனைவி பச்சையம்மாள். இவர்களது மகள் லோகேஸ்வரி (வயது 22), சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று லோகேஸ்வரி விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். உடனே அவர் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி லோகேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து பச்சையம்மாள் அளித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story