பெண் வருவாய் ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை


பெண் வருவாய் ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 25 April 2022 7:08 PM IST (Updated: 25 April 2022 7:08 PM IST)
t-max-icont-min-icon

பெண் வருவாய் ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

திருச்சி, ஏப்.26-
திருச்சி மாவட்டம் முசிறி பூமாலைபுரத்தை சேர்ந்தவர் முனிசாமி. இவர் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை மாதம் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு அப்போதைய தும்பலம் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்த புஷ்பவள்ளியிடம் விண்ணப்பித்து இருந்தார். அப்போது இலவச வீட்டுமனை பட்டா வழங்க ரூ.750 லஞ்சமாக தர வேண்டும் என புஷ்பவள்ளி கேட்டுள்ளார். இதனையடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத முனிசாமி திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அவர்கள் கொடுத்த ஆலோசனையின் பேரில் முனிசாமி லஞ்சம் கொடுத்தபோது, மறைந்து இருந்த  லஞ்ச ஒழிப்பு போலீசார் புஷ்பவள்ளியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வக்கீல் ஜோதிமணி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் ஊழல் தடுப்பு கோர்ட்டு சிறப்பு தனிநீதிபதி கார்த்திகேயன் நேற்று தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட புஷ்பவள்ளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

Next Story