திருவாரூர் மாவட்டத்தில் ரூ.12 கோடியில் தூர்வாரும் பணி பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. தகவல்
திருவாரூர் மாவட்டத்தில் ரூ.12 கோடியே 8 லட்சம் செலவில் தூர்வாரும் பணி நடைபெற உள்ளதாக பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. கூறினார்.
திருவாரூர்:-
திருவாரூர் மாவட்டத்தில் ரூ.12 கோடியே 8 லட்சம் செலவில் தூர்வாரும் பணி நடைபெற உள்ளதாக பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. கூறினார்.
தூர்வாரும் பணி
திருவாரூர் ஒன்றியம் கானூர் கிராமத்தில் கல்லுக்குடி வடிகால், வாய்க்காலை பொக்லின் எந்திரம் மூலம் தூர்வாரும் பணிகளை பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. நேற்று தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நடப்பாண்டில் முதல்-அமைச்சர் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 549 தூர்வாரும் பணிகளை 4294.94 கி.மீ. தூரத்துக்கு ரூ.71 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
இதில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களை தூர்வார 115 பணிகள் நடக்கிறது. மாவட்டத்தில் 1200.56 கி.மீ. நீளத்திற்கு ரூ.12 கோடியே 8 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற உள்ளது.
பாசன வசதி
இந்த பணிகள் அனைத்தும் தொடங்கப்பட்டு விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்லுக்குடி வடிகால் மற்றும் தென்ஓடாச்சேரி வாய்க்கால் 8 கி.மீ. நீளத்திற்கு ரூ.7 லட்சத்து 91 ஆயிரம் செலவில் தூர்வாரும் பணி தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 2,850 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் முருகவேல், ஒன்றியக்குழு தலைவர் தேவா, உதவி செயற்பொறியாளர்கள் பாண்டியன், உதவி பொறியாளர் மாணிக்கவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story