பள்ளிக்கரணையில் உள்ள அசாம் பவனை முற்றுகையிட்டு காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை பள்ளிக்கரணையில் உள்ள அசாம் பவனை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடியின் பயணம் குறித்து சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட அந்த மாநில காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானியை கருத்து சுதந்திரத்துக்கு எதிராக அசாம் மாநில போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை பள்ளிக்கரணையில் உள்ள அசாம் பவனை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ரஞ்சன் குமார் தலைமை தாங்கினார்.
இதில் மாநில செயலாளர்கள் விஜயசேகர், அயன்புரம் சரவணன், புழுதிவாக்கம் பகத்சிங் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story