கறிக்கோழிக்கான வளர்ப்பு கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் கலெக்டரிடம் மனு
கறிக்கோழிக்கான வளர்ப்பு கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் கலெக்டரிடம் மனு
நாமக்கல்:
கறிக்கோழிக்கான வளர்ப்பு கூலியை உயர்த்தி வழங்க கோரி நேற்று நாமக்கல் மாவட்ட கறிக்கோழி வளர்ப்போர் விவசாயிகள் நலச்சங்கத்தினர் கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் மனு கொடுத்தனர்.
கலெக்டரிடம் மனு
நாமக்கல் மாவட்ட கறிக்கோழி வளர்ப்போர் விவசாயிகள் நலச்சங்கத்தினர் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 400 பேர் கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறோம். இதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஒரு கிலோவுக்கு 6 ரூபாய் 50 காசுகள் வழங்குகிறது. தற்போது விலைவாசி உயர்வால் இடுபொருட்களான கடலை புண்ணாக்கு, தேங்காய் புண்ணாக்கு, பாசி பருப்பு மற்றும் தேங்காய் நார், கரிமூட்டை, மின்சார கட்டணம், பண்ணை பராமரிப்பு உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்து விட்டன. எனவே கறிக்கோழி வளர்ப்புக்கான கூலியை எப்.சி.ஆர்.2.00 ரக கோழிகளுக்கு ரூ.12-ம், எப்.சி.ஆர்.1.60 ரக கோழிகளுக்கு ரூ.20 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும்.
வேலைநிறுத்தம்
இது தொடர்பாக நாங்கள் பல்லடத்தில் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுமத்திடம் தெரிவித்தோம். ஆனால் அந்த குழுமம் தனி, தனியாக நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சொல்லுகிறது. எனவே தனியார் கறிக்கோழி நிறுவனங்களின் முறையற்ற செயல்பாடுகளை கண்டித்து வருகிற 29-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அன்று முதல் கோழிகுஞ்சுகளை விடுவது இல்லை என முடிவு செய்து உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து அவர்கள் வளர்ப்பு கூலியை உயர்த்தி வழங்க கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும், கால்நடை இணை இயக்குனர் அலுவலகத்திலும் மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story