மோகனூர் மாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
மோகனூர் மாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
மோகனூர்:
மோகனூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு திருவிழா கம்பம் நடப்பட்டு, காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினசரி பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தக்குடம் எடுத்து வந்து கோவில் முன் நடப்பட்டுள்ள கம்பத்துக்கு ஊற்றி வழிபட்டனர். நேற்று முன்தினம் இரவு வடிசோறு பூஜையும், நேற்று அதிகாலை தீக்குண்டத்தில் தீபம் ஏற்றி தீக்குண்டம் போடப்பட்டது. காலை பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் சாமிக்கு வேண்டுதலை நிறைவேற்றினர்.
இதையடுத்து மதியம் காவிரி ஆற்றுக்கு சென்ற ஏராளமான பக்தர்கள் புனித நீராடி ஊர்வலமாக வந்து கோவில் முன் அமைக்கப்பட்டுள்ள தீக்குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் இரவு மாவிளக்கு பூஜை நடைபெற்றது.
விழாவில் இன்று (செவ்வாய்கிழமை) காலை பொங்கல் வைத்தலும், கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் நடக்கிறது. பின்னர் இரவு கம்பம் பிடிங்கி காவிரி ஆற்றில் விடப்பட்டு நாளை (புதன்கிழமை) மாலை மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story