நாமக்கல்லில் கலெக்டரின் கார் முன்பு அமர்ந்து பெண் தர்ணா போராட்டம்
நாமக்கல்லில் கலெக்டரின் கார் முன்பு அமர்ந்து பெண் தர்ணா போராட்டம்
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ஜான்சி ராணி (வயது 45), இவர் சவுண்ட் சர்வீஸ் அமைக்க (ஒலி ஒளி) குமாரபாளையத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கடந்த 2011-ம் ஆண்டு கடன் கேட்டு விண்ணப்பித்து உள்ளார். கடன் கிடைக்காததால், தற்போது மீண்டும் அதே வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்து உள்ளார். மேலும் கடன் குறித்து வங்கி அதிகாரிகளிடம் பலமுறை கேட்டதாக தெரிகிறது.
ஆனால் வங்கி அதிகாரிகள் உரிய பதில் அளிக்காததால் மனமுடைந்த ஜான்சிராணி நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் மனு கொடுத்தார். பின்னர் திடீரென கலெக்டரின் கார் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றார். இச்சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story