மராட்டிய பயிற்சி வனச்சரகர்கள் தாவரவியல் பூங்காவை ரசித்தனர்


மராட்டிய பயிற்சி வனச்சரகர்கள் தாவரவியல் பூங்காவை ரசித்தனர்
x
தினத்தந்தி 25 April 2022 8:09 PM IST (Updated: 25 April 2022 8:09 PM IST)
t-max-icont-min-icon

நாடுகாணியில் மராட்டிய பயிற்சி வனச்சரகர்கள் தாவரவியல் பூங்காவை கண்டு ரசித்தனர்.

கூடலூர்

நாடுகாணியில் மராட்டிய பயிற்சி வனச்சரகர்கள் தாவரவியல் பூங்காவை கண்டு ரசித்தனர்.

தாவரவியல் பூங்கா

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நாடுகாணியில் வனத்துறைக்கு சொந்தமான தாவரவியல் பூங்கா உள்ளது. இங்கு அரிய வகை தாவரங்கள், மீன் கண்காட்சியகம், வனவிலங்குகளின் உடற்பாகங்கள் கொண்ட அருங்காட்சியகம், பெரணி இல்லம், ஆர்க்கிட்டோரியம், திசு ஆராய்ச்சி கூடம், காட்சி கோபுரங்கள் உள்ளது. 

இந்த பூங்கா, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், வன மற்றும் தாவரவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு சிறந்த கல்வி சுற்றுலா மையமாக திகழ்கிறது. மேலும் சீசன் காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் தலமாக விளங்குகிறது.

பயிற்சி வனச்சரகர்கள்

இந்த நிலையில் மராட்டிய மாநிலம் குண்டல் வன அகாடமியை சேர்ந்த 52 பயிற்சி வனச்சரகர்கள் உதவி பாதுகாவலர் ரூபாலி தலைமையில் இன்று காலை 8 மணிக்கு நாடுகாணி தாவரவியல் பூங்காவுக்கு வந்தனர். அவர்களை வனச்சரகர் பிரசாத் தலைமையிலான வனத்துறையினர் வரவேற்றனர். தொடர்ந்து பூங்கா மற்றும் அதன் வனப்பகுதிகளை பயிற்சி வனச்சரகர்கள் பார்வையிட்டனர். 

தொடர்ந்து காட்சி கோபுரத்தில் ஏறி இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர். பின்னர் அரிய வகை தாவரங்கள், மீன் கண்காட்சியகம், பெரணி இல்லங்கள் உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர். 

பாதுகாக்க வேண்டும்

இதையடுத்து பூங்கா வளாகத்தில் பயிற்சி வனச்சரகர்கள் மத்தியில் நாடுகாணி வனச்சரகர் பிரசாத் அறிவுரை வழங்கி பேசும்போது கூறியதாவது:-வனத்தை பாதுகாப்பதில் வனச்சரகர்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். வனவிலங்கு-மனித மோதல்களை தடுப்பதில் தனி கவனம் செலுத்த வேண்டும்.  

செயற்கையாக வனப்பகுதியில் தீ பரவாமல் பாதுகாக்க வேண்டும். மேலும் அழிவின் பிடியில் உள்ள அரிய வகை தாவரங்களை முழுமையாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவைகளை பாதுகாக்கவும் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் பயிற்சி வனச்சரகர்கள் நீலகிரியின் பல்வேறு இடங்களை காண புறப்பட்டு சென்றனர்.


Next Story