மசாஜ் சென்டரில் விபசாரம்; 3 பேர் கைது


மசாஜ் சென்டரில் விபசாரம்; 3 பேர் கைது
x
தினத்தந்தி 25 April 2022 8:11 PM IST (Updated: 25 April 2022 8:11 PM IST)
t-max-icont-min-icon

சென்னை நுங்கம்பாக்கம் மசாஜ் சென்டரில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பெண்களை மீட்டு அரசு காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர்கோட்டம் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கட்டிடத்தில் செயல்படும் மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பதாக நுங்கம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த மசாஜ் சென்டரை ரகசியமாக கண்காணித்தபோது அங்கு பெண்களை வைத்து விபசாரம் நடப்பது உறுதியானது.

இதையடுத்து பெண்களை வைத்து விபசாரம் நடத்திய, சென்னை எம்.கே.பி. நகர் 13-வது சென்டிரல் கிராஸ் தெருவை சேர்ந்த தீபக் (வயது 37), குன்றத்தூர் மெட்ரோ கிராண்ட் சிட்டி பகுதியை சேர்ந்த அசோக்குமார் (31), போரூர் 5-வது தெரு ஆர்.ஈ. நகரை சேர்ந்த அருண்குமார் (23) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 4 பெண்களை மீட்டு அரசு காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.


Next Story