விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை
கொரடாச்சேரி அருகே விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
கொரடாச்சேரி:-
கொரடாச்சேரி அருகே உள்ள தேவர்கண்டநல்லூரை சேர்ந்தவர் ராஜமுத்து (வயது47). இவர் தேவர்கண்டநல்லூரில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவருடைய மகள் நிதிவர்ஷா (19), மன்னார்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர் மனவேதனையில் இருந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று தந்தையின் ஓட்டலில் இருந்த எலி மருந்தை (விஷம்) தின்றார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நிதிவர்ஷாவை உறவினர்கள் மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நிதிவர்ஷா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராஜமுத்து கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story