குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலையத்தை இந்து முன்னணியினர் முற்றுகை
குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலையத்தை இந்து முன்னணியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
குலசேகரன்பட்டினம்:
உடன்குடி வாரச்சந்தையில் நேற்று மாலையில் 4 பேர் ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த குலசேகரன்பட்டினம் போலீசார் விரைந்து சென்று, மத பிரசாரத்தில் ஈடுபட்ட நபர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதுதொடர்பாக இந்து முன்னணி நகர செயலாளர் சித்திரை பெருமாள் அளித்த புகாரின்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே மத பிரசாரம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story