விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்ட அட்டை வழங்கும் முகாம்


விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்ட அட்டை வழங்கும் முகாம்
x
தினத்தந்தி 25 April 2022 10:00 PM IST (Updated: 25 April 2022 10:00 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்ட அட்டை வழங்கும் முகாம் வருகிற 30-ந் தேதி வரை நடக்கிறது

சீர்காழி
சீர்காழி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிசான் கடன் அட்டை மற்றும் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்ட அட்டை வழங்கும் முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று திட்டை, பெருமங்கலம், எடக்குடி, வடபாதி-1, திருவாலி, மணிகிராமம், மங்கைமடம், சீர்காழி, எடக்குடி வடபாதி-2, கொண்டல் கிராமங்களில் நடைபெற்றது. இன்று(செவ்வாய்க்கிழமை) சட்டநாதபுரம், மருதங்குடி, கன்னியாகுடி, நாங்கூர், வாணகிரி, பெருந்தோட்டம்-2, விளந்திடசமுத்திரம், கற்கோவில், நிம்மேலி கிராமங்களிலும், நாளை(புதன்கிழமை) தாடாளன்கோவில், அத்தியூர், திருப்புங்கூர், கீழசட்டநாதபுரம், இளைய மதுக்கூடம், தென்னம் பட்டினம், செம்மங்குடி, கதிராமங்கலம், மருவத்தூர் கிராமங்களிலும், நாளை மறுநாள்(வியாழக்கிழமை) கைவிளாஞ்சேரி, ஆதமங்கலம், புங்கனூர், காத்திருப்பு, அகர பெருந்தோட்டம், எம்பாவை, திருநகரி, தில்லைவிடங்கன் கிராமங்களிலும் முகாம் நடக்கிறது.
இதேபோல, 29-ந் தேதி காரைமேடு, நெப்பத்தூர், காவிரிப்பூம்பட்டினம் (கீழையூர்) புதுத்துறை, திருவெண்காடு, பெருந்தோட்டம்-1, மேலநாங்கூர் கிராமங்களிலும், 30-ந் தேதி குணத்தலப்பாடி, அகணி, கொண்டத்தூர், செம்பதனிருப்பு, ராதாநல்லூர், மேலையூர் (பூம்புகார்) கிராமங்களிலும் முகாம் நடத்தப்படுகிறது. மேற்கண்ட பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெறுமாறு வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story