5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி-மந்திரி சுதாகர்
5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்
பெங்களூரு: 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நேற்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு...
நாடு முழுவதும் கொரோனா பரவல் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனா 4-வது அலை உருவாவதை தடுக்க மத்திய அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது. சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருவதற்கு மத்திய அரசு தடையும் விதித்துள்ளது. தற்போது நாடு முழுவதும் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
கூடிய விரைவில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.
அதன்படி, கூடிய விரைவில் நாடு முழுவதும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அவ்வாறு அனுமதி வழங்கினால், 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பயன் அளிக்கும் விதமாக இருக்கும்.
பெற்றோர் முன்வர வேண்டும்
தற்போது பள்ளிகள் முடிந்து மீண்டும் 2022-23-ம் ஆண்டுக்கான கல்வி ஆண்டு தொடங்க உள்ளது. எனவே 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு எந்தவிதமான தயக்கமும் இன்றி பெற்றோர் தடுப்பூசி போட முன்வர வேண்டும். 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு உடனடியாக பெற்றோர் தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய வேண்டும்.
கர்நாடகத்தில் 2-வது டோஸ் தடுப்பூசி போடாமல் நிறைய பேர் அலட்சியமாக இருந்து வருகிறார்கள். அவர்கள் உடனடியாக 2-வது டோஸ் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும்.
ஏனெனில் நாட்டில் பல மாநிலங்களில் கொரோனா அதிகரித்திருப்பதால், 4-வது அலைக்கான முன் எச்சரிக்கை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 4-வது அலை உருவான பின்பு தடுப்பூசி போடுவதற்கு முன்பாக முன் எச்சரிக்கையாக தற்போதே அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு தான் தடுப்பூசி போட்டு கொள்ளும்படி அரசு வலியுறுத்துகிறது. மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story