எட்டயபுரத்தில் தாசில்தார் காரை கிராம மக்கள் முற்றுகை


எட்டயபுரத்தில் தாசில்தார் காரை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 25 April 2022 10:10 PM IST (Updated: 25 April 2022 10:10 PM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரத்தில் தாசில்தார் காரை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

எட்டயபுரம்:
எட்டயபுரம் தாலுகா லக்கம்மாள் கிராமத்தில் உள்ள கோவிலில் கொடை விழா நடத்துவது தொடர்பாக, இரு தரப்பினருக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து கோர்ட்டு உத்தரவின்பேரில், எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம், தாசில்தார் கிருஷ்ணகுமாரி தலைமையில் நேற்று நடந்தது.

கூட்டத்தில் இரு தரப்பினரும் இணைந்து கொடை விழாவை நடத்துமாறு தாசில்தார் அறிவுறுத்தினார். இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவர்கள், அங்கிருந்து காரில் புறப்பட்ட தாசில்தார் கிருஷ்ணகுமாரியை முற்றுகையிட்டனர். உடனே எட்டயபுரம் போலீசார் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து போகச் செய்தனர். பின்னர் தாசில்தார் காரில் புறப்பட்டு சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

Next Story