தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம்


தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 April 2022 10:17 PM IST (Updated: 25 April 2022 10:17 PM IST)
t-max-icont-min-icon

காட்பாடி மின் வாரிய அலுவலகம் முன்பு தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காட்பாடி

வேலூர் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் காந்திநகரில் உள்ள மின்சார மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சம்மேளன துணைப் பொதுச் செயலாளர் சுப்பிரமணி, சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் கோவிந்தராஜ், மாநில இணைச் செயலாளர் செந்தில், ஐ.என்.டி.யு.சி நல்லண்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

வாரிய பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும். மின்சார வாரியத்தில் புதிய பதவிகளை அனுமதிக்கக்கடாது. ஒப்பந்தத்தின் அடிப்படையில் மின்இணைப்பு எண்ணிக்கையும், வட்டம் மற்றும் மண்டலங்கள் உருவாக்குவது தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் பேசி தீர்வு காண வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Next Story