மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி
x
தினத்தந்தி 25 April 2022 10:19 PM IST (Updated: 25 April 2022 10:19 PM IST)
t-max-icont-min-icon

குளத்தூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள இ.வேலாயுதபுரத்தை சேர்ந்த சமயராஜ் மகன் கார்த்திக் (வயது 23), வெள்ளத்துரை மகன் பொன்ராஜ் (29). இவர்கள் நேற்று முன்தினம் இரவு குளத்தூரில் இருந்து இ.வேலாயுதபுரம் நோக்கி  கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் (42), குமார் மகன் அருண் (28), நெல்லையப்பன் மகன் இசக்கி (27) ஆகியோர் சூரங்குடியில் இருந்து தூத்துக்குடி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். 

குளத்தூர் அருகே சுப்பிரமணியபுரம் விலக்கில் வந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் மோட்டார் சைக்கிள்களில் இருந்து தூக்கி வீசப்பட்ட 5 பேரும் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த குளத்தூர் போலீசார் அங்கு வந்து 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கார்த்திக்கை நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிசிச்சை பலனின்றி அவர் நேற்று காலையில் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 4 பேரும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து குளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story