தனியார் பஸ்களை நடுரோட்டில் நிறுத்தி கண்டக்டர்கள் தகராறு
கடலூரில் தனியார் பஸ்களை நடுரோட்டில் நிறுத்தி கண்டக்டர்கள் தகராறு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்,
கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று மதியம் நெல்லிக்குப்பம் நோக்கி தனியார் பஸ் சென்றது. அந்த பஸ் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் வளைவில் வந்த போது, மற்றொரு தனியார் பஸ் அந்த பஸ் முன்னால் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய கண்டக்டர், ஏற்கனவே வந்த பஸ் கண்டக்டர், டிரைவரிடம் நாங்கள் பஸ் எடுக்கும் நேரத்தில் நீங்கள் எப்படி பஸ்சை எடுத்து வரலாம் என்று தகராறு செய்தார். இதனால் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பஸ்சில் வந்த பயணிகள் கீழே இறங்கி, உங்கள் பிரச்சினையை பிறகு பேசிக்கொள்ளுங்கள். அதற்காக பஸ்சை நடுரோட்டில் நிறுத்துவீர்களா? என்று அவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து அவர்கள் தங்களது பஸ்களை எடுத்துச்சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story