விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெளிப்பாளையம்:
நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராமலிங்கம், செயலாளர் பாஸ்கர் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில கட்டுப்பாடுக்குழு உறுப்பினர் வக்கீல் பாண்டியன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் சம்பந்தம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தொழிலாளர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை நூறு நாள் வேலையை ஆண்டுக்கு 200 நாட்களாக அதிகப்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ.600 வழங்க வேண்டும்.
ஓய்வூதிய சட்டம்
தொழிலாளர்களுக்கு சாதி பாகுபாடின்றி நிலுவையின்றி ஊதியம் வழங்க வேண்டும். சிறு, குறு விவசாயிகள் உட்பட விவசாய தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் வழங்கும் வகையில், மாநில அரசு தனி ஓய்வூதிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Related Tags :
Next Story