சிறப்பு கிராம சபை கூட்டம்
நாகை மாவட்டத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. கிராம சபை கூட்டம்
சிக்கல்:
நாகை மாவட்டத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
கிராம சபை கூட்டம்
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் கீழ்வேளூர் ஒன்றியம் 38 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
ராதாமங்கலம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி திட்ட அலுவலர் ரவிச்சந்திரன், ஊராட்சி ஒன்றிய ஆணையர் தியாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகோபால் ஊராட்சி தலைவர் ஜீவா, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல வெண்மணி, திருக்கண்ணங்குடி, அகரகடம்பனூர், கோகூர் உள்ளிட்ட 38 ஊராட்சிகளில் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம்நடந்தது. இதில் பல்வேறு தீர்மானங்கள் மற்றும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.மேலும் ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
திருமருகல்
திருமருகல் ஒன்றியம் நரிமணம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக் தலைமையிலும், பில்லாளியில் ஊராட்சி மன்ற தலைவர் தேவி சகாயராஜ் தலைமையிலும், காரையூரில் ஊராட்சி மன்ற தலைவர் கலாராணி உத்திராபதி தலைமையிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.
வால்குடியில் ஊராட்சி மன்ற தலைவர் அகிலாண்டேஸ்வரி விநாயகசுந்தரம் தலைமையிலும், திருப்புகலூரில் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் தலைமையிலும், திருமருகலில் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தலைமையிலும், உத்தமசோழபுரத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஜனனி பாலாஜி தலைமையிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. திருமருகல் ஒன்றியத்தில் 39 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
வேதாரண்யம்- ஆயக்காரன்புலம்
வேதாரண்யம் தாலுகா கருப்பம்புலத்தில் சிறப்பு கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராம் தலைமையில் நடந்தது. இதில் பசுமை கிராமம், தூய்மை கிராமம் குறித்து உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது. கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் இரண்டாம் சேத்தி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராமையன் தலைமையில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வீரையன் மற்றும் உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வாய்மேடு
வாய்மேட்டில் ஊராட்சி மன்றத்தலைவர் மலர் மீனாட்சி சுந்தரம் தலைமையிலும், தகட்டூரில் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி பாலகுரு தலைமையிலும் தாணிக்கோட்டகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் தலைமையிலும், வண்டுவாஞ்சேரியில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி குமார் தலைமையிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
அண்ணாப்பேட்டையில் வனிதாரவிச்சந்திரன் தலைமையிலும், பஞ்சநதிக்குளம் கிழக்கில் ஊராட்சி மன்ற தலைவர் வீரதங்கம் தலைமையிலும், பஞ்சநதிக்குளம் மேற்கில் ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை பாண்டியன் தலைமையிலும் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story