கலெக்டர் அலுவலகம் முன்பு திருநங்கைகள் சாலை மறியல்


கலெக்டர் அலுவலகம் முன்பு திருநங்கைகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 25 April 2022 10:33 PM IST (Updated: 25 April 2022 10:33 PM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் அலுவலகம் முன்பு திருநங்கைகள் சாலை மறியல்

கடலூர், 

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்  பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. அப்போது கலெக்டர் அலுவலகம் முன்பு வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு வழங்கக்கோரி 7 திருநங்கைகள் திடீரென அங்குள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், பொதுமக்களுக்கு இடையூறு செய்யாமல் உங்கள் கோரிக்கைகளை கலெக்டரிடம் தெரிவியுங்கள் என்றனர். இதை கேட்ட அவர்கள் போராட்டத்தை கைவிட்டு, கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்று கலெக்டரிடம் மனு அளித்து விட்டு சென்றனர். 

Next Story