என்ஜினீயர் வீட்டில் 4 பவுன் நகை, ரூ.3 லட்சம் திருட்டு


என்ஜினீயர் வீட்டில் 4 பவுன் நகை, ரூ.3 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 25 April 2022 10:35 PM IST (Updated: 25 April 2022 10:35 PM IST)
t-max-icont-min-icon

ஆம்பூரில் என்ஜினீயர் வீட்டில் 4 பவுன் நகை, ரூ.3 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

ஆம்பூர்

ஆம்பூர் பைபாஸ் சாலை சாமியார் மடம் பகுதி அருகே வசிப்பவர் பிரகாசம் வயது (வயது 46). இவர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் உதவி பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். பணி நிமித்தமாக கடந்த வாரம் மைசூரு சென்றார்.  ஊருக்கு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
 
உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் வைத்திருந்த 4 பவுன் நகை, ரூ.3 லட்சத்தை காணவில்லை. வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த மோட்டார்சைக்கிளையும் காணவில்லை. நகை, பணம், மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை மர்மநபர்கள் யாரோ திருடி சென்று விட்டனர்.

இதுகுறித்து பிரகாசம் ஆம்பூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் வழக்குப்பதிவு செய்து திருடர்களை தேடி வருகின்றனர்.

ஆம்பூர் பகுதியில் கடந்தசில நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து 4 வீடுகளில் மர்மநபர்கள் நகை, பணத்தைக் திருடி சென்றனர். அதன் தொடர்ச்சியாக தற்போது குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் வீட்டில் நகை, பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது.

Next Story