பிக்கனப்பள்ளியில் சிக்கம்மா, தொட்டம்மா கோவில் திருவிழா: 38 சாமி சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள்
பிக்கனப்பள்ளியில் சிக்கம்மா, தொட்டம்மா கோவில் திருவிழா: 38 சாமி சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள்
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பிக்கனப்பள்ளி கிராமத்தில் சிக்கம்மா, தொட்டம்மா கோவில் திருவிழா கடந்த 22-ந் தேதி தொடங்கியது. விழாவையொட்டி கர்நாடகம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து 50 சாமி சிலைகள் கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ெதாடர்ந்து பக்தர்கள் தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று முன்தினம் சாமிகள் ஊஞ்சல் உற்சவம், இரவு சிக்கம்மா, தொட்டம்மா பல்லக்கு ஊர்வலம் நடந்தது.
இந்தநிலையில் நேற்று கர்நாடக மாநிலத்தில் இருந்து சிக்கம்மா, தொட்டம்மா சாமிகளின் அண்ணன், தம்பிகளான 38 சாமி சிலைகள் மற்றும் எருதுகள் கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் சாமி சிலைகள் மற்றும் எருதுகளை கர்நாடக மாநிலத்திற்கு வழி அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது சிக்கம்மா, தொட்டம்மா அண்ணன், தம்பி சாமிகளை பிரிந்து செல்ல மனமில்லாமல் கண்ணீர் விட்டு அழும் நிகழ்ச்சியும், சாமிகளை பிரிந்து செல்ல முடியாமல் காளைகள் கண்ணீர் விட்ட நிகழ்ச்சியும் நடந்தன. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story