ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கைது
பெண்கள் உள்பட 3 பேரை தாக்கிய ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கைது செய்யப்பட்டார்.
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே உள்ள ராமநாயக்கனூரை சேர்ந்தவர் ராமராஜ். அவருடைய மனைவி பாலாமணி (வயது 52). அவரது அக்காள் தமிழரசி (55). இவரது மருமகன் சிவநாதன் (34). இவர்கள், ராமாநாயக்கனூர் கன்னிமார் கோவில் அருகே வாணிக்கரை சாலையில் காரில் சென்று கொண்டிந்தனர்.
அப்போது வாணிக்கரை ஊராட்சி மன்றத்தலைவர் பேபியின் கணவர் பரமசிவம் (60), அவருடைய அண்ணன் பழனியப்பன் (64) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
சாலையில், ஒருவரையொருவர் முந்தி சென்றது தொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பரமசிவம், பழனியப்பன் ஆகியோர் சேர்ந்து காரில் சென்ற பாலாமணி, தமிழரசி, சிவநாதன் ஆகியோரை சரமரியாக தாக்கினர்.
இது குறித்து கூம்பூர் போலீஸ் நிலையத்தில் பாலாமணி புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து பரமசிவத்தை கைது செய்தார். மேலும் தலைமறைவான பழனியப்பனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story