கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடங்கியது


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடங்கியது
x
தினத்தந்தி 25 April 2022 11:03 PM IST (Updated: 25 April 2022 11:03 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடங்கியது

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தொடங்கியது.
செய்முறை தேர்வு  
தமிழகம் முழுவதும் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. இந்த நிலையில், குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களுடன் செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், செய்முறை தேர்வுகள் நேற்று முதல் வருகிற மே 2-ந் தேதி வரை நடக்கிறது. 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தமுள்ள, 192 மேல்நிலைப்பள்ளிகளில் செய்முறை தேர்வுகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு காலை, 8 மணி முதல், 10 மணி வரை, 10.15 மணி முதல், 12.15 மணி வரை, 12.45 மணி முதல் மதியம், 2.45 மணி வரை, மதியம் 3 மணி முதல் 5 மணி வரை செய்முறை தேர்வு நடக்கிறது. செய்முறை தேர்வுக்கான கால அளவு 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.
ஒப்படைப்பு
செய்முறை தேர்வுகள் நடக்கும் நாட்களில் விடைத்தாள்கள் அன்றே திருத்தப்பட்டு மதிப்பெண் பட்டியல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரியிடம் ஒப்படைக்கப்படுகிறது. கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று பிளஸ்-2 உயிரியல் பிரிவில் தாவரவியல், விலங்கியல் பிரிவு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற்றது. 
இதில் முதன்மை தேர்வாளராக பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன், புறத்தேர்வாளர்களாக ஹேமலதா, மேனகா மற்றும் ஆசிரியர்கள் செய்முறை தேர்வுகளை நடத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம், 22 ஆயிரத்து, 478 மாணவர்கள் செய்முறை தேர்வு எழுதுகின்றனர்.

Next Story