காரிமங்கலத்தில் கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் சோதனை


காரிமங்கலத்தில் கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் சோதனை
x
தினத்தந்தி 25 April 2022 11:03 PM IST (Updated: 25 April 2022 11:03 PM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலத்தில் கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் சோதனை செய்தார்.

காரிமங்கலம்:
காரிமங்கலம், பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி ஆகிய பகுதியில் உள்ள மிட்டாய் விற்பனை மொத்த கடைகள் மற்றும் சில்லறை கடைகளில் தடைசெய்யப்பட்ட சிரின்ஜ் சாக்லேட் விற்பனை குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் சோதனை செய்தார். அப்போது தடை செய்யப்பட்ட சாக்லெட்டை விற்பனை செய்யக்கூடாது. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவு பொருட்களில் தயாரிப்பு தேதி, முகவரி, காலாவதியாகும் தேதி ஆகியவற்றை தெளிவாக குறிப்பிடவேண்டும். தரமில்லாத குளிர்பானம், ஐஸ் கிரீம் ஆகியவற்றை விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் முக கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

Next Story