கிராம சபை கூட்டம் பாதியில் ரத்து


கிராம சபை கூட்டம் பாதியில் ரத்து
x
தினத்தந்தி 25 April 2022 11:53 PM IST (Updated: 25 April 2022 11:53 PM IST)
t-max-icont-min-icon

எஸ்.மங்கலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது.

சிங்கம்புணரி,

 சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட எஸ்.மங்கலம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி தலைமையில் கிராம சபை கூட்டம் தொடங்கியது. பற்றாளராக வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டார். கிராம சபை கூட்டத்திற்கு துணைத்தலைவர் உள்ளிட்ட 7 வார்டு உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால் கூட்டத்திற்கு வந்த 70-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வார்டு உறுப்பினர்கள் துணைத்தலைவர் இல்லாமல் கூட்டம் நடத்த கூடாது. இந்த ஊராட்சியில் எந்த ஒரு வளர்ச்சி திட்டப் பணிகளும் நடைபெறாமல் உள்ளது. எனவே அனைவரும் கலந்து கொண்டு பிறகு தான் கூட்டத்தை நடத்த வேண்டுமென கூறி கையெழுத்து போட மறுத்துவிட்டனர்.அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் பொதுமக்களிடம் கிராம சபைக்கூட்டத்திற்கு பொதுமக்கள் இருந்தாலே போதும், துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள் அவசியம் இல்லை என எடுத்துக் கூறியும் பொதுமக்கள் கேட்கவில்லை. இதனால் கூட்டம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. 
மல்லாகோட்டை ஊராட்சியில் தலைவர் விஜயா ராதாகிருஷ்ணன் தலைமையில் துணைத்தலைவர் கீதா பிரியா முன்னிலையிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. தீர்மானங்களை மல்லாகோட்டை ஊராட்சி செயலர் ருக்மணி வாசித்தார்.அதேபோல் மதுராபுரி ஊராட்சியில் மன்ற தலைவர் கருப்பையா தலைமையிலும், துணைத்தலைவர் பொன் விஜயன் முன்னிலையிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி செயலர் நல்லம்மாள் தீர்மானங்களை வாசித்தார்.

Next Story