சங்கராபுரம் ஊராட்சியில் உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்
சங்கராபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அனைத்து கட்சியை சேர்ந்த ஊராட்சி உறுப்பினர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்குடி,
சங்கராபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அனைத்து கட்சியை சேர்ந்த ஊராட்சி உறுப்பினர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கூறியதாவது:-
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இருக்கும்போது யாரோ ஒரு சிலர் ஊராட்சி நிர்வாகத்தை நடத்துவதை கண்டித்தும், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பெரும்பாலான வேலைகளுக்கு டெண்டர் விடப்படாமல் காலதாமதம் செய்வதை கண்டித்தும், டெண்டர் விடப்பட்ட வேலைகளுக்கு அதற்கான உத்தரவை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் உள்ளிருப்புப் போராட்டம் நடைபெறுவதாக தெரிவித்தனர். அதனையொட்டி சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரும் சங்கராபுரம் ஊராட்சிமன்றத்தின் தனி அலுவலருமான ஹேமலதா போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் அடிப்படையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரு வாரத்தில் தீர்வு காணப்படும் என உறுதியளித்தார். அதன்பேரில் காலை 11 மணி அளவில் தொடங்கப்பட்ட உள்ளிருப்பு போராட்டம் மதியம் 2 மணியளவில் முடிவடைந்தது/ஊராட்சி உறுப்பினர்களின் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தையொட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story