அழகன்குளம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
அழகன்குளம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்-கலெக்டர் பங்கேற்பு
பனைக்குளம்
தேசிய ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் அழகன்குளம் ஊராட்சியில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்த சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். இதில் முதல்-அமைச்சர் அனைத்து ஊராட்சிமன்ற தலைவர்களுக்கு வழங்கப்பட்ட தேசிய ஊராட்சி தின வாழ்த்து மடல் கிராம சபையில் வாசிக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் தலைமையில் நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான உறுதிமொழியினை பொதுமக்கள் எடுத்துக் கொண்டனர். பின்னர் கலெக்டர் கூறியதாவது, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகளிலும் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. கிராமங்களை வலிமைப்படுத்தவும், அங்கே வளர்ச்சியினை ஊக்கப்படுத்தவும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய அதிகாரங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளன. கிராம சபை கூட்டங்களில் கிராமத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் தவறாது கலந்துக் கொள்ள வேண்டும். சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வதற்காக இது போன்ற கிராமசபைக் கூட்டங்களில் பொதுமக்கள் கலந்துரையாடலாம். ஊராட்சியில் வரவு-செலவு தொடர்பாக சந்தேககங்களை கேட்டறிந்து கொள்ளலாம் என்றார்.
Related Tags :
Next Story