3 பேருக்கு கொரோனா


3 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 26 April 2022 12:24 AM IST (Updated: 26 April 2022 12:24 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ராமநாதபுரம்
நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் சென்னையில் அதிகரித்துள்ளதோடு மற்ற மாவட்ட பகுதிகளிலும் தொற்று சிறிய அளவில் பரவ தொடங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தொற்று இல்லாமல் இருந்து வந்த நிலையில் நேற்று 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 3 பேரும் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். 3 மாதங்களாக தொற்று இல்லாமல் இருந்து வந்த நிலையில் தற்போது 3 பேருக்கு தொட்டு ஏற்பட்டுள்ளது மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story