மாற்றுத்திறனாளி பெண் மீது தாக்குதல்; நடவடிக்கை எடுக்கக்கோரி சாலைமறியல்
மாற்றுத்திறனாளி பெண் மீது தாக்குதல்; நடவடிக்கை எடுக்கக்கோரி சாலைமறியல்
கமுதி
கமுதி அடுத்துள்ள கோவிலாங்குளம் அருகே உள்ள திருவரை கிராமத்தைச் சேர்ந்த பாண்டி மகள் ஜெயலட்சுமி(வயது 43). மாற்றுத்திறனாளி. இவரது குடும்பத்திற்கும், அதே ஊரைச் சேர்ந்த முனியசாமி தரப்பினருக்கும் நிலம் சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஜெயலட்சுமி வீட்டில் தனியாக இருந்தபோது முனியசாமி தரப்பினர் உள்ளே புகுந்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து ஜெயலட்சுமி கோவிலாங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் ஜெயலட்சுமியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது உறவினர்கள் கமுதி-சாயல்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவிலாங்குளம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். மாற்றுத்திறனாளி பெண்ணை தாக்கியதாக முனியசாமி, சண்முகவேல், சக்திவேல் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் மறியல் செய்து போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியதாக புதுக்குளம் கிராம நிர்வாக அலுவலர் பாண்டியம்மாள் அளித்த புகாரின் பேரில் மேகவர்ணம், பெரியசாமி, முனியசாமி உள்பட 9 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Related Tags :
Next Story