சாலைப்பணியில் ஈடுபட்ட சுங்கச்சாவடி பணியாளர்கள் 3 பேர், கார் மோதி பலி


சாலைப்பணியில் ஈடுபட்ட சுங்கச்சாவடி பணியாளர்கள் 3 பேர், கார் மோதி பலி
x
தினத்தந்தி 26 April 2022 12:34 AM IST (Updated: 26 April 2022 12:34 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் அருகே சாலைப்பணியில் ஈடுபட்ட சுங்கச்சாவடி பணியாளர்கள் 3 பேர், கார் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

சாத்தூர்,
சாத்தூர் அருகே சாலைப்பணியில் ஈடுபட்ட சுங்கச்சாவடி பணியாளர்கள் 3 பேர், கார் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
சுங்கச்சாவடி பணியாளர்கள் 
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடியை சேர்ந்த பணியாளர்கள்,  சாத்தூர்-கோவில்பட்டி நான்குவழிச்சாலையில் மீனாட்சிபுரம் சந்திப்பு அருகில் சாலையின் ஒரு பகுதியில் மட்டும் வாகனம் செல்லும் வகையில் தடுப்புகள் வைத்து அங்கு வேலை செய்து கொண்டிருந்தனர். 
அப்போது சாத்தூரில் இருந்து கோவில்பட்டி நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தது.
ஆட்கள் ேவலை செய்துகொண்டு இருந்த இடத்தின் அருகே அந்த கார் சென்ற போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. வேலை செய்து கொண்டு இருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதிவிட்டு கவிழ்ந்தது.
3 பேர் பலி 
இந்த விபத்தில் சுங்கச்சாவடி பணியாளர்கள் திருவிருந்தான்பட்டியைச் சேர்ந்த செல்லப்பாண்டி (வயது 34), வாழவந்தாள்புரத்தை சேர்ந்த கருப்பசாமி (31), சிவந்திபட்டியை சேர்ந்த ராம்குமார் (32) ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். 
இதில் செல்லப்பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேரும் உடனடியாக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியில் கருப்பசாமி உயிரிழந்தார். 
ராம்குமாருக்கு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் முதல் உதவி அளித்து, பின்னர் மேல்சிகிச்சைக்காக ெநல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ராம்குமாரும் பரிதாபமாக உயிரிழந்தார். 
முன்னாள் ராணுவ வீரர் 
இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய கார் கவிழ்ந்ததில், கோவில்பட்டி பாண்டவர்மங்கலத்தை சேர்ந்த டிரைவரும், ஓய்வு பெற்ற ராணுவ வீரருமான குருசாமியும் (55) பலத்த காயம் அடைந்தார். இவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 
இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story