வடகாடு முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


வடகாடு  முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 26 April 2022 12:36 AM IST (Updated: 26 April 2022 12:36 AM IST)
t-max-icont-min-icon

வடகாடு முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

வடகாடு:
முத்துமாரியம்மன் கோவில் 
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் ஒன்றாக வடகாடு முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 17-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. அதைதொடர்ந்து, மண்டகப்படிதாரர்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது. மேலும், பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்தும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். 
தேரோட்டம் 
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன் தேரில் எழுந்தருளினார். பின்னர் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு வீதிகளிலும் அசைந்தாடி வந்தது. அப்போது பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதில் வடகாடு சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு மஞ்சள் விளையாட்டு நடைபெறும். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர். 

Next Story