வாகனம் மோதி புள்ளிமான் சாவு


வாகனம் மோதி புள்ளிமான் சாவு
x
தினத்தந்தி 26 April 2022 12:45 AM IST (Updated: 26 April 2022 12:45 AM IST)
t-max-icont-min-icon

வாகனம் மோதி புள்ளிமான் செத்தது.

ஆதனக்கோட்டை:
ஆதனக்கோட்டையில் மணியாச்சி காடு உள்ளது. இந்த காட்டு பகுதியில் அதிகமான புள்ளிமான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் புள்ளிமான் ஒன்று மணியாச்சி காட்டிற்குள் இருந்து வந்து  பெருங்களூர் அருகே புதுகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் படுகாயமடைந்த புள்ளிமான் பரிதாபமாக செத்தது. இதையடுத்து அங்கு வந்த ஆதனக்கோட்டை போலீசார் மற்றும் வனத்துறையினர் புள்ளிமானை மீட்டனர். 

Next Story