போலீஸ்காரர் மீது தாக்குதல்
சாத்தூர் அருகே போலீ்ஸ்காரர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாத்தூர்,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அணைக்கரைபட்டியைச் சேர்ந்தவர் செல்லையாராஜா (வயது 39). இவர் சாத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். நில விவகாரத்தில் ஏற்பட்ட விரோதம் காரணமாக ஆத்திரம் அடைந்த சிலர், டீக்கடையில் நின்றிருந்த செல்லையாராஜாவை தாக்கியதாக தெரியவருகிறது. இதில் படுகாயம் அடைந்த செல்லையாராஜா மயங்கினார். உடனே அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து செல்லையாராஜா அளித்த புகாரின் பேரில் முனிஸ்வரன், முனியாண்டி, இருளப்பன், முனீஸ், இளையபாரதி ஆகியோர் மீது அம்மாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story