விருதுநகர் நகராட்சி என்ஜினீயர் உதவியாளர் பணியிலிருந்து விடுவிப்பு


விருதுநகர் நகராட்சி என்ஜினீயர் உதவியாளர் பணியிலிருந்து விடுவிப்பு
x
தினத்தந்தி 26 April 2022 12:56 AM IST (Updated: 26 April 2022 12:56 AM IST)
t-max-icont-min-icon

திட்டங்களில் தாமதம் செய்ததாக புகார் வந்ததின் அடிப்படையில் விருதுநகர் நகராட்சி என்ஜினீயர் உதவியாளர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

விருதுநகர், 
விருதுநகர் நகராட்சி என்ஜினீயர் மணி. என்ஜினீயரிங் பிரிவில் உதவியாளராக பணியாற்றுபவர் பரந்தாமன். 
என்ஜினீயர் மணி, திட்டப்பணிகளில் தாமதம் செய்ததாகவும், உதவியாளர் பரந்தாமன் குடிநீர் வினியோகம் தொடர்பாக பொதுமக்கள் தரும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் நகராட்சிகளின் நிர்வாக இயக்குனருக்கு, விருதுநகர் நகராட்சி கமிஷனர் செய்யது முஸ்தபா கமால் அறிக்கை அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர், நெல்லை மண்டல இயக்குனர் விஜயலட்சுமிக்கு இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில் நெல்லை மண்டல இயக்குனர் விஜயலட்சுமி இதுகுறித்து ஆய்வு செய்து விருதுநகர் நகராட்சி என்ஜினீயர் மணி மற்றும் நகராட்சி என்ஜினீயரிங் பிரிவு உதவியாளர் பரந்தாமன் ஆகிய 2 பேரையும்  பணியிலிருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளார். இவர்களுக்கு மாற்று பணி இன்னும் ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 

Next Story